வியாழன், 10 அக்டோபர், 2013

நீ தேடும் உலகம் நிரந்தரமல்ல..நீ உருவாக்கும் உலகமே நிரந்தரம்..

எத்தனை முறை தோற்றாலும்,இலக்கினை மட்டும்
உறுதியாய் வை...காலம் வேண்டுமானால் உனது 
வெற்றி வாய்ப்பை தள்ளி வைக்கலாம்..
ஆனால் உனது விடா முயற்சி உன்னை அந்த 
இலக்கினை வென்றே தீரும்..

ஒவ்வொரு விடியலிலும் அந்த இலக்கினை 
அடைவதற்காய்...புது வழிகளில் அடி எடுத்து வை..
உனது அடி எடுத்தல் எப்போது முடிவுக்கு வருகிறதோ..
அப்போது உனது இலக்கினை அடைந்திருப்பாாய்...

புதிது புதிதாய் முயற்சி செய்...இழப்புகள்அற்ற வெற்றி நிரந்தரமல்ல..
தொடர் இழப்புகளும் வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்லாது..
கைக்கு கிடைத்திருக்கும் மூங்கிலை புல்லாங்குழல் ஆக்குபவனே வெற்றி பெறுகிறான்..
மூங்கிலை புல்லாங்குழலாக்காவிடினும் பரவாயில்லை..அடுபெரிக்க பயன் படுத்தி விடாதே..

நாம் பிறரிடமிருந்து எதை  பெற விரும்புகிறோமோ ..அதயே பிறருக்கும் வழங்கு..
மல்லாக்க படுத்து எச்சிலை துப்பும் போது ,நம் மார் மீதுதான்
 படும் என்கிற சுய உணர்வு எப்போதும் வேண்டும்.

நீ தேடும் உலகம்  நிரந்தரமல்ல..நீ உருவாக்கும் உலகமே நிரந்தரம்..
உருவாக்கு,எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து காயங்களை பொருட்படுத்தாமல் உருவாக்கு..
நீ உருவாக்கும் உலகத்திற்குள் மட்டுமே..உனது சந்ததியின் முன்னேற்றம் இருக்கிறது..

ஏதோ ஒன்று தேடி அது கிடைக்காமல் அடுத்த சில நாட்களிலே புறமுதுகிட்டு ஓடிய மூடர்களின் 
பிதற்றல்களை புறக்கணி..மூடர்களின் பிதற்றல்களுக்கு செவி சாய்க்கும் அந்த தருணம் நாமும் மூடனாய் மாறி கொண்டிருக்கிறோம் என்றே பொருள்..

உன்னால் எதை சாதிக்க முடிந்ததோ..அதன் பலனை உனது சந்ததியே ருசிக்கும்..இது நியதி..

                                                                                    - கே.எஸ்.அன்வர்