புதன், 29 மே, 2013

தபால்துறையை நவீனப்படுத்த டிசிஎஸ் நிறுவனத்துடன் ரூ.1,100 கோடியில் ஒப்பந்தம்

மும்பை : தபால் துறையை கம்ப்யூட்டர்மயமாக்கி நவீனப்படுத்த ரூ.1,100 கோடியில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
தபால் துறையில் அனைத்து பணிகளையும் கம்ப்யூட்டர்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, மெயில் சர்வீஸ், நிதி மற்றும் கணக்குகள், பணியாளர் நலன் பிரிவு, வாடிக்கையாளர் சேவை உள்பட அனைத்து பணிகளையும் மேம்படுத்த தனியாருடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. 

டெண்டரில், முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி மற்றும் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) நிறுவனம் வெற்றி பெற்று, ரூ.1,100 கோடிக்கான ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது. ஒப்பந்தப்படி, தபால் துறையின் அனைத்து பணிகளையும் கம்ப்யூட்டர்மயமாக்கி 6 ஆண்டுகளுக்கு டிசிஎஸ் நிறுவனம் சேவை அளிக்கும்.  இது குறித்து, மத்திய தபால் துறை செயலாளர் பி.கோபிநாத் கூறியதாவது:

தபால்கள் அனுப்புவது உள்ளிட்ட சேவைகளின் தரத்தை உயர்த்தவும், வேகத்தை அதிகரித்து டெலிவரியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது போன்றவற்றில் புதிய ஒப்பந்தம் உதவும். சிறந்த நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் நிர்வாக செயல்பாடுகள் மேம்படும் என நம்புகிறோம். இவ்வாறு கோபிநாத் தெரிவித்தார். இதே போல், இந்தியா போஸ்ட்,2012 திட்டத்தின் கீழ் ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் சிஸ்டம்ஸ் ஒருங்கிணைப்பு துறைகளில் மேலும் 8 ஒப்பந்தங்கள் கோரப்படவுள்ளன.
நமது போராட்டங்கள் மற்றும் போட்டி வழு பெறுகிறது .நமது தொழில் நுட்பங்களை முறையாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என்கிற சூழல் நிலவுவதால்.பிரான்சிசெகள் தங்களை தயார் படுத்தி கொள்ளவும் முறையான பயிற்சி பெறவும் அறிவுறுத்த படுகிறார்கள்.மேலும் இணையம் மற்றும் கணினி சார்ந்த நுன் அறிவினை பெறவும் வலியுறுத்துகிறோம்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக