வெள்ளி, 10 மே, 2013

டீசல் விலை உயர்வு : முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது முதல், நான்காவது முறையாகத் தற்போது டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை அண்மையில் குறைத்துவரும் எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை மட்டும் உயர்த்துவது நியாயமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதி டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.நம்மை போன்ற நிறுவனங்களின் சேவை கட்டணமும் உயரும் அபாய நிலை இருப்பதால்  மத்திய அரசு நேரடியாக தலையிட்டு இது போன்ற விலை ஏற்றங்களை கட்டுக்குள் கொண்டு வர தவறினால் ,டீசலை மட்டுமே பிரதான செலவீனமாக கொண்டு போக்குவரத்து மற்றும் கார்கோ துறையின் சேவை கட்டணங்கள் உயருவதை  யாராலும் தவிர்க்க முடியாது .இதன் மூலம் பாதிக்க படுவது அப்பாவி பொது மக்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக