செவ்வாய், 7 மே, 2013

அடப் பாவி கொரியர் காரா..!


மிஸ்டர். மொக்கை கொஞ்சம் கஞ்சத்தனம் உள்ளவர். அவர் மனைவியின் பிறந்தநாளுக்கு ஒரு பரிசு வாங்கித்தர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பரிசுப்பொருள் கடைக்கு போய்ப் பார்த்தார். எதுவுமே ஆயிரம் ரூபாய்க்கு குறைந்ததாக இல்லை..! கடைசியாக 100 ரூபாய்க்கு, எதுவும் கிடைக்குமா என்று கேட்க, கடைக்காரர் 4 துண்டுகளாக உடைந்த ஒரு கண்ணாடிச் சிற்பத்தை எடுத்துக் காட்டினார்..
“உடையாம இருந்தா இதோட ஒரிஜினல் விலை 3000 ரூபாய். உடைஞ்சு போனதால 100 ரூபாய்க்கு தரேன்..!”
மொக்கை, அதை நன்றாக கிஃப்ட் பேக் செய்து தன் மனைவி பெயருக்கு கொரியரில் அனுப்பச்சொல்லிவ­ிட்டு கிளம்பினார்.(அஞ­்சலில் வரும்போது உடைந்து விட்டதாக மனைவி நினைத்துக் கொள்வாள் என்பது மொக்கையின் எண்ணம்.)
மறுநாள், மனைவியின் பிறந்தநாள்..! கொரியர் வந்தது. மனைவி ஆவலாகப் பிரிக்க, மொக்கை மெல்ல நழுவினார்..
சிறிது நேரத்தில் மொக்கையை அவர் மனைவி அழைத்தாள்..
“இங்கே பாருங்க அநியாயத்தை.. அழகான சிலை, துண்டு துண்டா உடைஞ்சு போயிடுச்சுங்க..­”
மொக்கை போலியாகப் பொங்கினார்..
“அடப் பாவி கொரியர் காரா..! 3000 ரூபாய் போட்டு வாங்கிய சிலையை அநியாயமா உடைச்சு கொண்டு வந்திருக்கானே..­ அந்த பயல் எங்கே..? அவனை நான் சும்மா விடப்போறதில்லே.­.!”
” பரவாயில்லேங்க..­ இருந்தாலும் அவன் புத்திசாலிங்க..­ உடைக்கப்போறது தெரிஞ்சே, முன்கூட்டியே 4 பீசையும் தனித் தனியா அழகா பேக் செஞ்சு கொண்டாந்திருக்க­ான்..!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக