திங்கள், 22 ஜூலை, 2013

முடியும் என்று நம்புங்கள்...


ஒரு செயலில் நமக்கு வெற்றி கிடைப்பதற்கான முதல் படி யே, அதை நம்மால் வெற்றிகர மாக செய்ய முடியும் மற்றும் அதை செய்வதற்கான திறன் நம் மிடம் உள்ளது என்று நம்பு வது தான். இறைவன், உங்களுக்கு அற்புதமான சக்தி கொண்ட மூளையை கொடுத்திருக்கிற ார் என்று நினைத்துக் கொள்ளுங் கள். விஞ்ஞானிகள் கடுமை யான முயன்றும் மூளையின் செயல்பாட்டுஅற்புதத்தையும், அதன் திறனையும் புரிந்து கொ ள்ள முடியவில்லை. மூளையா னது, உங்கள் வாழ் வின் சிறியது முதல் பெரியது வரை அனைத்தையும் நினைவில் கொள் ளும் திறன் பெற்றது.
ஒரு விஷயத்தை பலரும் செய்கிறார்கள், உங்களைவிட வயதானவர்கள் செய்கிறார்கள், வயதில் குறைந்தவர்கள் செய்கி றார்கள், உங்களைவிட குறை வாய் படித்தவர்கள் செய்கிறார் கள் என்ற நிலை இருக்கையில், உங்களாலும் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். மேற்கூறிய நபர்கள் சிறந்த நினைவாற்றலைப் பெற்றிருக்கிறார ்கள் என்றால், ஏன் உங் களால் முடியாது என்று எண்ண வேண்டும். இந்த நம்பிக்கை தான் நம்மை எதையும் சாதிக்க வைக்கும் மற்றும் நமது நினைவுத்திறனை மேம்படுத்த உதவும்.
நினைவாற்றல் மேம்பாடு வாழ்க்கையின் அம்சம்
ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இல்லையெனில், அவனால் எதை யும் சாதிக்க முடியாது. நம்பிக் கை இருந்தால் ஒரு மலையைக் கூட நகர்த்தி விடலாம் என்பது ஒரு பழ மொழி.
வாழ்க்கையில் எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை. எளிதாக கிடைத்துவிட்டால ், அது நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஒரு விஞ்ஞானி யோ, வரலாற்று அறிஞரோ, இசை க் கலைஞரோ, அரசியல்வாதி யோ யாராக இருந்தாலும், தமது துறையில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை, வெற்றிக்காக வே அர்ப்பணிக்கின்ற னர்.
ஒருவர் தனது உடலை ஆரோக்கி யமாக வைக்க விரும்பினால், மு றையான உணவுமுறை, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை ஆகிய வற்றை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்காக அவர் தனதுவாழ் க்கையையே அர்ப்பணிக்க வேண் டியதில்லை. ஆனால், தனது வாழ்க்கை முழுவதும் அந்த நடை முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவற்றை வாழ்வின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இது போலத் தான் நமது நினைவுத் திறனும். நினைவுத் திற னை மேம்படுத்துவதற் காக நீங்கள் உங்களின் வாழ்க்கை யையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. நினைவுத்திறன் மேம்பாட்டு வழிமுறைகளை வாழ்க்கையின் அம்சங்களாக மாற்றி க்கொள்ள வேண்டும்.
தமது முயற்சிகளை நாளை துவங்கலாம், அடுத்த வாரம் துவங்கலாம், அடுத்த மாதம் துவ ங்கலாம் அல்லது அடுத்த வருடம் துவங்கலாம் என்று பலர் தள்ளிப் போடுகின்றனர். ஆனால், இது போன்று தள்ளிப் போடுவதால், ஏராளமானோர், கடைசிவரை எதையும் செய்யாமலேயே இரு ந்து விடுகின் றனர். எனவே எதைதொடங்கினாலும் உடனே துவங் குங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக